Categories
உலக செய்திகள்

“டெய்லி ஆட்டைய போடுறியா?” திருடனுக்கு ஷாக் பரிசு…. பெண்ணின் சுவாரஸ்யமான செயல்…!!

பெண் ஒருவர் தன் வீட்டில் தினமும் திருடுபவரை பழிவாங்கும் விதமாக செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது.

கனடாவில் உள்ள ஹெமில்டன் நகரில் வசிப்பவர் லூரி பிரிங்கில். இவர் தினமும் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். எனவே ஆன்லைன் பார்சிகள் வீடு தேடி வரும். இவர் பெரும்பாலும் அமேசான் நிறுவனத்தில் தான் பொருட்களை ஆர்டர் செய்து வந்துள்ளார். கனடா நாட்டில் தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் டெலிவரி செய்யப்படும் பொருட்கள் வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து வைக்கப்படும். வீட்டில் உள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுப்பதற்காக அமேசான் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் பிரிங்கலுக்கு வரும் பார்சல்கள் தினமும் அவர் வீட்டின் முன் வைத்து செல்லப்படும் நிலையில் அதை தினமும் யாரோ ஒருவர் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் கோபமடைந்த பிரிங்கி திருடி செல்பவர்களை பழிவாங்குவதற்காக தன் வீட்டில் இருந்த காலி அட்டைப் பெட்டியில் பூனையின் கழிவுகளை நிரப்பி வீட்டு வாசலில் ஆதார் செய்த பார்சல் போல வைத்துள்ளார். பின்னர் யார் அதை திருடுகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக வீட்டுக் கதவில் உள்ள ஒரு கேமராவை ஆன் செய்து வைத்துள்ளார்.

அப்போது நபர் ஒருவர் அந்த அட்டைப்பெட்டியினை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து பிரிங்கி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த காட்சிகள் குறித்து பதிவு செய்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. பிரிங்கி தனக்கு வரும் பார்சலை திருடுபவர்களை பழிவாங்குவதற்காக தன் வீட்டுப் பூனையின் கழிவுகளை அட்டைப்பெட்டியில் வைத்து பரிசாக வழங்கிய சம்பவம் நெட்டிசன்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |