நீர் (லெமன் ப்ளேவர், ஆரஞ்சு துண்டுகள், பெர்ரி மற்றும் வெள்ளரிக்காய்), பால், வலுவூட்டப்பட்ட பால், 100% பழ ஜூஸ் அல்லது வெஜிடபிள் ஜூஸ் . குறைவான ஊட்டச்சத்து உங்கள் உணவில் சேர்ப்பது பிற ஆரோக்கியமான பானம் மற்றும் உணவுகளை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும். இதனால் உங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கல்லீரல் பிரச்சனை
அதிகபடியாக சக்கரை உட்கொள்ளுவது கல்லீரலில் கொழுப்பை கரைக்கின்றது. கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். இது இயற்கையாக உங்கள் உடலில் நச்சுத்தன்மை உண்டாக்குகின்றது. சோடாவில் பெரும்பாலும் அதிக பிரக்டோஸ் சோளம் சிரப் அதிகமாக உள்ளது, இது உங்கள் கல்லீரல் வழியாக செயலாக்கப்படும். இது கல்லீரலுக்கு அதிக சுமையை கொடுப்பதோடு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
இதய நோய்களுக்கு வழி வகுக்கும்
சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவை உயர்த்த வழி வகுக்கிறது. இதனால் உங்கள் இதய நோய்க்கு அதிக அளவு காரணமாகிறது. இதில் சேர்க்கப்பட்ட சர்க்கரையில் இருந்து 25 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட கலோரிகள் கொண்ட ஒரு உணவு இருதயநோய் இறப்புக்கான காரணமாக அமைகிறது.