Categories
மாநில செய்திகள்

பால்வளத்துறை திட்டங்கள் – முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் இன்று பால்வளத்துறையின் செயல்பாடுகள் பற்றியும், நிதி நிலை அறிக்கை குறித்தும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |