Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் பாதிப்பு… அணையில் ஏற்பட்டுள்ள விரிசல்… ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றம்..!!

ஜெர்மனியில் அணை ஒன்றில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றமாக உள்ளனர்.

பல்வேறு நாடுகளும் ஐரோப்பாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதோடு நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் ஜெர்மனி பெரும் அபாயத்தை சந்தித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் மட்டும் 106 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் Bonn நகரத்துக்கு அருகாமையில் உள்ள Euskirchen பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணை ஒன்றில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 4 ஆயிரத்து 500 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்தை காப்பாற்ற ஏதேனும் அதிசயம் நடக்காதா என்று கடவுளை வேண்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பொறியாளர்கள் ஏராளமான மழைத்தண்ணீர் அணையை நோக்கி வந்துள்ளதால் அந்த அணை எந்நேரமும் உடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே அங்குள்ள மக்கள் அணையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக மிகவும் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர்.

Categories

Tech |