Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணிக்காக இப்படியா பண்றது…. ஒருவழியா சேதப்படுத்தியாச்சு…. அபராதம் விதித்த வனத்துறையினர்…!!

அத்துமீறி தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து சேதப்படுத்திய குற்றத்திற்காக 10 வாலிபர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில், சாமியார் ஓடையின் குறுக்கே வனத்துறையினர் சார்பில் அணை கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரானது தொப்பம்பட்டி, சாமியார் ஓடை, முருகன்பட்டி மற்றும் காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு சென்று விடும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது சாமியார் ஓடையில் நீர் வரத்து அதிகமாக இருந்தாலும், தடுப்பணையிலிருந்து முருகன்பட்டி செல்லும் நீரானது குறைந்த அளவே காணப்படுகிறது.

இதனால் முருகன்பட்டி ஊரில் வசிக்கும் முத்துக்குமார், சிலம்பரசன், தமிழழகன், சந்திரசேகர் போன்ற 10 வாலிபர்கள் தடுப்பணையில் ஒரு பகுதியை உடைத்து தங்கள் ஊருக்கு தண்ணீரை அதிக அளவில் திருப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததோடு, தடுப்பணையில் உடைக்கப்பட்ட இடத்தை மணல் மூட்டைகளை கொண்டு அடைத்துவிட்டனர். இதனை தொடர்ந்து அத்துமீறி அனுமதி இன்றி அங்கு வந்து தடுப்பணையை சேதப்படுத்திய குற்றத்திற்காக சந்திரசேகர், முத்துக்குமார், தமிழழகன் உள்ளிட்ட 10 வாலிபர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வனத்துறையினர் சார்பில் விதிக்கப்பட்டது.

Categories

Tech |