Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடல்போல் காட்சியளிக்கும் அணை… நீர் மட்டதால் வெள்ளஅபாய எச்சரிக்கை…769கனஅடி நீர் திறப்பு…!!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக எட்டிய நிலையில் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வைகை ஆறு, சுருளியாற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகளில் ஓடும் தண்ணீர் கடைசியாக வைகை அணையில் சேருகின்றது. இதனால் அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து 71 அடி கொண்ட அணையில் 67 அடி நீர் இருந்துள்ளது. தற்போது தொடர் நீர் வரத்தால் அணையின் நீர்பட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து 66 அடி நீர்மட்டம் இருக்கும்போதே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும், 68.50 கன அடியை ஏற்றினால் 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 68.1 அடியாக உள்ளது. இதனால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கின்றது. மேலும் வைகை அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதால் நேற்று குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான 769 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 5,299 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருக்கின்றது.

Categories

Tech |