Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 1,65,799ஆக உயர்வு – உலக அளவில் 9ம் இடம்!

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,706ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 89,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 19,372 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 16,281ஆக உள்ளது. குஜராத் மாநிலத்தில் 15,562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 8067, மத்திய பிரததேசம் – 7,453, உத்தரபிரதேசத்தில் – 7,170, மேற்கு வங்கம் – 4,536, ஆந்திரா – 3,251, பஞ்சாப் – 2,158, பீகார் – 3,296, கர்நாடகாவில் 2,533 பேரும்,

தெலுங்கானா – 2,256, ஜம்மு காஷ்மீர் – 2,036, ஹரியானா – 1,504, கேரளா – 1,088 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்னர். உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை 4ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

Categories

Tech |