Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 52ஆக உயர்வு!

புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதன்முதலாக டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மஹே பகுதியை சேர்ந்த அந்த நபரை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கையானது 50ஆக இருந்தது.

அதில் புதுச்சேரியை சேர்ந்த 44 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரெட்டிபாளையத்தில் ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியான நபரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 52ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |