சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் பல்வேறு விதமான வித்தியாசமான பல வீடியோக்களை பார்க்கிறோம். இதில் மக்களை மகிழ்விக்கும் விதமான வீடியோக்களும், ஆச்சரியப்படுத்தும் விதமான வீடியோக்களும் கூட வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஆயிரம் டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ராட்சசன் டிராகன் வாயை பிளப்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சமூக வலைதளமான youtube-ல் ஜியோஸ்கான் டிரோன் ஷோ என்பவர் முதலில் வெளியிட்டுள்ளார். ஆனால் வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. மேலும் டிராகன் வாயை பிளக்கும் வீடியோவை தற்போது மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டதோடு ஷேர் செய்தும் வருகின்றனர்.
Dragons created by 1000 drones during Geoscan Show🐉🐉🐉
— Tansu Yegen (@TansuYegen) September 30, 2022