Categories
மாநில செய்திகள்

அட கொடுமையே… பி.எச்டி மாணவிக்கு” பாலியல் தொந்தரவு”… ஐஐடி பேராசிரியர் சஸ்பெண்ட்….!!

சென்னை ஐஐடியில் முனைவர்பட்ட ஆய்வு மாணவி ஒருவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஐடியில் சிவில் இஞ்சினியரிங் துறை பேராசிரியராக இருந்தவர் மாதவகுமார். இவரது தலைமையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாணவியிடம் அடிக்கடி பேராசிரியர் ஜொல்லு விட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது தொல்லை எல்லை மீறியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில், வீட்டுக்கு வா ஆய்வு பற்றி விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

உஷாரான மாணவி செல்லாமல் தவிர்த்து விட்டார். இதனால் கோபமடைந்தவர் ஆய்வை தொடர முடியாது என்கிற ரீதியில் மிரட்டியுள்ளார். ஆபாசமாக பேசியுள்ளார். தொந்தரவைத் தாங்க முடியாத அந்த மாணவி புகார் அளித்துள்ளார். பேராசிரியை ஹேமா மூர்த்தி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

அதில் மாதவகுமார் தவறு செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை பேராசிரியர் பொறுப்பிலிருந்து துணை பேராசிரியராக பதவி இறக்கம் செய்துள்ளனர். 2 வருடங்களுக்கு முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 5 வருடங்கள் மற்ற மாணவர்களுக்கும் பாடம் எடுக்கத் தடை விதித்துள்ளனர். தொழில்நுட்ப கல்வியின் சிகரமாக மாணவர்களால் பார்க்கப்படும் ஐஐடியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது முகம் சுழிக்கச் செய்துள்ளது.

Categories

Tech |