Categories
அரசியல் மாநில செய்திகள்

“அட எவ்வளவு எளிமை” மாணவர்கள் முன் புஷ்-அப் செய்து…. ராகுல் வெறித்தனம்…!!

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் முளகுமுடில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதையடுத்து அவர் அங்குள்ள மாணவர் ஒருவருக்கு அகிடோ கலையை செய்து காட்டியுள்ளார். மேலும் அவர்களோடு இணைந்து புஷ்-அப் எடுத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |