சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள்.
சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்ற நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.
சென்ற ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2,47,98,927 பயணிகளும் ஜூலை மாதத்தில் 53 லட்சம் பேரும் பயணித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 56.6 இலட்சம் என உயர்ந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் மேலும் பயணிகளில் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. சென்ற செப்டம்பர் மாதத்தில் 61 லட்சத்து 12 ஆயிரத்து 96 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளார்கள்.