Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….. ஜீ தமிழின் பிரபல சீரியல் நிறைவு பெறுகிறதா…..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!

விரைவில் ‘செம்பருத்தி’ சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ”செம்பருத்தி”. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கார்த்திக் ஷபானா இருவரும் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்தனர்.

சன் டிவியில் களமிறங்கும் 'செம்பருத்தி' சீரியல் நடிகை: யாருக்கு பதிலாக  தெரியுமா?- Dinamani

சில வருடங்களுக்கு முன்னரே கார்த்திக் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் தற்போது அக்னி என்பவர் நடித்து வருகிறார். மேலும், அவ்வப்போது இந்த சீரியலில் சில டல்லான காட்சிகள் இடம் பெறுவதால் இந்த சீரியலை முடித்துவிடலாம் என ரசிகர்கள் புலம்பத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், இந்த சீரியல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விரைவில் இந்த சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |