தனியார் திருமணச் சங்கத்தின் கூட்டாளராக தெனாலி பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் புலிவர்த்தியும், ஹைதராபாத்தைச் சேர்ந்த கமலாபாய் என்பவரும் உள்ளனர். பொறியாளரான திலீப், ஹைதராபாத்தில் ஏரோஃபல்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமணம் கடந்த நவ. 21ஆம் தேதி தெனாலி பகுதியில் உள்ள கௌதம் கிராண்ட் ஓட்டலில் சற்று வித்தியாசமாக நடைபெற்றது.
அதாவது சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துவைத்தார்.தொடர்ந்து தம்பதியினர் மாலை வேளையில் இஸ்லாமிய இமாம் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று (நவ. 22) காலை இந்து முறைப்படி மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.மும்மதங்களை சாட்சியாக வைத்து இந்தத் திருமணம் நடைபெற்றது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.