Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இதனால் தான் சூர்யாவுக்கு கொரோனாவா…? வெளியான தகவல்…!!

நடிகர் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தின் போது மாஸ்க் அணியாததால் தான் கொரோனா வந்ததாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனால் பொது மக்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் பலரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நலமுடன் உள்ளேன். வாழ்க்கை என்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும் நன்றிகளும் என்று சூர்யா தெரிவித்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சூர்யா தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மாஸ்க் போடாததால் தான் சூர்யாவுக்கு கொரோனா வந்ததாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |