விலங்குகளுக்கு ஐந்தறிவு இருப்பதால் அவை மனிதர்களை போல நடந்து கொள்ளாமல் வித்தியாசமாக இருக்கும். மேலும் அவை மூர்கதனத்துடன் நடந்துகொள்ளும் என்று நமக்கு தெரியும். அதிலும் யானை என்றாலே பலருக்கும் பயம். யானைக்கு மதம் பிடித்து விட்டால் அது அவ்வளவு தான். இந்நிலையில் இது எல்லாம் பொய் என்று யானை ஒன்று நிரூபித்துள்ளது. யானை பாகன் ஒருவர் சாலையில் யானையை கூட்டிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது யானைக்கு எதிரே விபத்தில் சிக்கி இறந்த நாய் ஒன்று கிடந்துள்ளது.
அப்போது நேராக சென்று கொண்டிருந்த யானை திடீரென்று அந்த நாய் இறந்து கிடப்பதை கிடப்பதை பார்த்து விட்டு சற்று விலகி அதை மதிக்காமல் நடந்து சென்றுள்ளது. ஆனால் அங்கிருந்து வந்த கார் வேகமாக நாயின் மத்தியில் சென்றுள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் யானையின் மதிநுட்பத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் மனிதர்களைவிட விலங்குகளுக்கு மதி நுட்பமும், நாகரிக செயலும் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1365573653157453826