செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி, அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க.
ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே வேண்டாம்னு சொன்னவரு, இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய கொள்கைக்கு நேரா வந்திருக்காங்க. நம்முடைய அரசில் தான் ஹிந்தி என்பது கட்டாயம் கிடையாது. மூன்று மொழி படிங்க. மூன்றாவது மொழி ஆப்ஷனல் என்று சொன்னோம். அதை மாநில அரசு நடைமுறைப்படுத்த ஆரம்பிச்சு இருக்காங்க. வேற விதத்தில் சொன்னாலும் கூட, அதை நடைமுறை படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
அமைச்சர் அண்ணன் கே. என் நேரு அவர்கள் 75 சதவீதம் முடிஞ்சிருச்சு, இன்னொரு அமைச்சர் 85 சதவீதம் முடிஞ்சிருச்சு, மேயர் அவர்கள் ஒரே போடா 95 சதவீதம் முடிஞ்சிருச்சு. ஒருஒருத்தரும் கேம் மாதிரி நம்பர் சொல்றதுல தான் குறியா இருக்காங்களே தவிர, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிக்கு கொடுத்திருக்கக் கூடிய பணத்தை முறையாக பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டல. அந்த ஆர்வம் காட்டிருந்தாங்கன்னா, இந்நேரம் சென்னையை எங்கேயோ கொண்டு போய் இருக்கலாம்.
நல்ல அதிகாரிகள் இருக்காங்க. குஜராத்ல ஐஏஎஸ் அதிகாரியா இருந்து, சென்னைக்கு இன்ஜார்ஜ் போட்டு இருக்காங்க. மத்திய அரசு பணம் கொடுக்குது, மாநில அரசுக்கு வேறு என்ன வேலைங்க ? இந்த அமைச்சர்கள் எல்லாம் குறுக்கவும், நெடுக்கவும் போய் குழப்பாமல் இருந்தால் சரி, வேலைகள் வேகமா நடந்து முடிஞ்சிடும் என தெரிவித்தார்.