Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடடே..! சேலம் சிறுமி மாஸ் காட்டிடுச்சே…. ”வெறும் 1.16 மணி நேரம்”…. 13 கி.மீ ஓடி உலக சாதனை …!!

சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோமீட்டர் தொலைவை 1.16 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

சேலத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயது சிறுமியான பிரதா என்பவர் கொரோனா விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். இவற்றை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Salem girl set a world record of 13 km in 1.16 hours

இந்த ஓட்டமானது சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கி, அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு வழியாக, காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. சிறுமி பிரதா 1.16 மணி நேரத்தில் 13 கிலோ மீட்டர் தொலைவை இடையில் நிற்காமல் கடந்து உள்ளதால் அவர் உலக சாதனையில் இடம் பெற்றார். சிறுமியின் முயற்சியினை உலக சாதனையாக அங்கீகரித்து நோபுல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Categories

Tech |