தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி தன்னுடைய 16 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கில் ரிலீஸ் ஆன உப்பேனா என்ற திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி செட்டி சடஅடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் சிவப்பு நிற உடையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை நடிகை கீர்த்தி செட்டி பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.