பிரபல ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் பிரியா பிரகாஷ் வாரியார் நடிக்கவுள்ளார்.
மலையாள சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெங்களூர் டேஸ். இந்த படத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அஞ்சலி மேனன் இயக்கிய திரைப்படம் தமிழில் பெங்களூரு நாட்கள் என்ற பெயரில் ரீமேக் செய்து ரிலீசானது.
இதனையடுத்து, எட்டு வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்திற்கு ‘யாரியான் 2’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக புருவ அழகி என அழைக்கப்படும் பிரியா பிரகாஷ் வாரியார் நடிக்க உள்ளார். இன்னொரு ஹீரோயினாக மலையாள நடிகை அனஸ்வரராஜன் நடிப்பதாக கூறப்படுகிறது.