Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. விரைவில் ”மாநாடு” படத்தின் இரண்டாம் பாகம்….? ஹிண்ட் கொடுத்த படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ”மாநாடு”. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ். ஜே .சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Maanaadu: The Tamil political action thriller movie issue sorted out in a  night | Maanaadu Movie:விடிய விடிய நடந்து முடிந்த மாநாடு பஞ்சாயத்து |  Movies News in Tamil

டைம் லூப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் ரிலீசாகி ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை வெளியிட்டு இறுதியில் ”LOOP Countinous soon” என நிறைவு செய்தனர். இதனால் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |