சாய்பல்லவி நடிக்கும் ”கார்கி” படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் வெளியான ”பிரேமம்” படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”கார்கி”.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தாத்தா இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கு சாய்பல்லவியே மூன்று மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ”கார்கி” படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.