தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏழு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி மாலை அல்லது இரவு புரெவி புயல் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.