Categories
சினிமா தமிழ் சினிமா

அட என்ன அழகு… கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக…. பரத் குடும்பத்தோடு அழகான புகைப்படம்…!!

நடிகர் பரத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி ஜாலியான வாலிப இளைஞராக சுற்றி வந்தவர் பரத். நடிகை சந்தியா உடன் நடித்த காதல் படத்தின் மூலம் பிரபலமானார். நகர காதல் மற்றும் கிராமத்து காதல் என்று பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் பல படங்களில் நடித்து வந்த அவர் பல ஆண்டுகளுக்கு பின் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் போலீசாக நடித்து வந்தார்.

ஜிம், உடற்பயிற்சி என்று தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டி வரும் பரத் ஹிந்தி படங்களிலும், மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் 2021 வெளியாக உள்ளன. மேலும் டைம் என்ன பாஸ் என்ற ஒரு வெப் சீரியலில் நடித்துள்ளார். பரத்  தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

Categories

Tech |