தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்களை கடந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படமாகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் துணை நடிகை ஒருவரின் குழந்தையை கையில் வைத்து கொஞ்சும் அழகிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.