Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடா…! ஜாதி வேண்டாம் என்கிறாரே… நாங்க கோச்சுக்க மாட்டோம்… சீமான் அரசுக்கு கோரிக்கை!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  வாக்கு கேட்கும் போது இதே போல் பல்லாயிர கணக்கான மக்கள்  கூடியிருந்த மேடையில் அன்பு மக்களே உங்கள் மகன் சொன்னேனே… ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ் இளைஞனை நிறுத்திட்டேன். நான் கேட்டேன்.  இவன் என் தம்பி. இவன் தமிழன் என்றால் எனக்கு ஓட்டு போடு. எனக்கு இவன் தாழ்த்தப்பட்டவன் என்று பார்த்தால்,  போட்டுறாத உன் ஓட்டு, எனக்கு தீட்டு என்று பேசினேன்.

இன்னும் நான் ஜெயகொண்டத்தில் பேசின பேச்சு இருக்கு. அடடா…!  ஜாதி வேண்டாம் என்கிறாரே…  ஜாதி வேண்டாம் என்று தான் சொல்கிறேன். தலைக்கு ஏற்ப எங்களுக்கு இடஒதுக்கீடு பிரிச்சு கொடுத்துட்டனா, நாங்க கோச்சுக்க மாட்டோம். இப்ப தேவர்ல… கோனார விட தேவருக்கு இடஒதுக்கீடு அதிகமா போச்சுன்னா…  என் கூட்டத்துக்கு வேண்டியது வந்துருச்சுல்ல,  தேவையான சாப்பாடு வந்துச்சு. அப்போ அவனுக்கு எத்தனை சாப்பாடு போனா நான் ஏன் வருத்தப்பட வேண்டும் ? என் பசிக்கு உணவு வந்துவிட்டது. அவன் பசிக்கு உணவு போவதில் எனக்கு மகிழ்ச்சி.

எங்க ஐயா ராமதாசு இவ்வளவு கேட்கிறார், அவ்வளவு கேட்கிறார்,  கொடுக்காத…  அவர்தான் பல தடவை சொல்கிறார் அல்லவா. ஜாதிவாரி எண்ணி கொடுக்கணும் என..  எண்ணி கொடுத்திடு. அவர் எதிர்க்க மாட்டார். உங்களுக்கு தெரியுமா ? இந்த இட ஒதுக்கீட்டுக்காக ஐயா பெரியார் வித்திட்டு இருக்கலாம். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டை தமிழின மக்களுக்கு போராடி பெற்று தந்த நம்முடைய பெருந்தகை நம்முடைய தாத்தா பெரு மதிப்பிற்குரிய ஆணை முத்து என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்திடக் கூடாது என தெரிவித்தார்.

Categories

Tech |