Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் நிரம்பி வழியும் அணைகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்ததால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

Image result for பில்லூர் அணை

இதனால் மேட்டுப்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணை கடந்த ஆகஸ்ட் மாதம் 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. அப்போது பவானி ஆற்றில் வினாடிக்கு 58 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பில்லர் அணை மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Image result for பில்லூர் அணை

எனவே பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் 4 மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பில்லூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

Categories

Tech |