Categories
சினிமா தமிழ் சினிமா

நடன இயக்குனர் ராபர்ட்டுக்கு பல கல்யாணம் ஆகி இருக்கு….. உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை…..!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டுள்ளார். “நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற” என சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்தில் ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்து இருக்கிறார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக கூறி, வீட்டை விட்டு வெளியில் போனாலும் நட்பு தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராபர்ட் உடன் இதற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படும் வனிதா தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், அவன் என்ன என் புருஷனா இல்லை பாய் ஃப்ரெண்ட். நானே பப்ளிசிட்டியாக அவரை யூஸ் செய்தேன். அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அவன் யாரையோ கல்யாணம் பண்ணனாம். அது யார் என எனக்கு தெரியவில்லை. பல கல்யாணம் நடந்திருக்கு. அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே என தெரியவில்லை. தற்போது சிங்கிள் என இமேஜ் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று வனிதா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |