பாடகி பிரகதி அம்மாவுடன் சேர்ந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சினிமா பிரபலங்கள் தினமும், சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, டான்ஸ் ஆடுவது, என எதையாவது செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பாடகி பிரகதி குரு, தனது தாயுடன் சேர்ந்து பல வீடியோக்களையும் மற்றும் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், வாத்தி கம்மிங் பாடல் ஓடிக்கொண்டிருக்க, மாடர்ன் உடையில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் பிரகதியை அவரது தாய் கனகா குரு டான்ஸ் ஆடி கொண்டே கடந்து செல்கிறார்.. பின்னர் சொடக்கடித்து ஆடும் நொடிப்பொழுதில் சேலை கட்டி குடும்ப பெண் போல காட்சியளிக்கும் பிரகதி தாயுடன் சேர்ந்து ஆடுகிறார். இந்த தோரணையான காட்சியை நீங்கள் பாருங்கள்! இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/B_RYuC9n_MQ/?utm_source=ig_web_button_share_sheet