சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் வருடம் தோறும் TANCET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு MBA, MCA, ME, M.TECH, M.ARCH, M.PLAN போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.
அதன்படி டான்செட் தேர்வு பிப்ரவரி மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழகமானது தங்களுடைய இணையதளங்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு தேதியை நீக்கியுள்ளது. அதோடு புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு பற்றிய தொடர் அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற முகவரியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.