பப்பாளியை வைத்து பொடுகு தொல்லையும், முடி உதிர்வதையும் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம்.
நீண்ட கூந்தலுக்கான ரகசியம் பப்பாளியில் உள்ளது. முடி உதிராமல் இருக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடவும் பப்பாளி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் இது போன்ற பழத் தோல்கள் மற்றும் விதைகளை கொண்டு நம் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம்.
அரைத்த பப்பாளி பழம் அதனுடன் ஆப்பிள் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் நன்கு குளிர தடவி சிறிது நேரம் களித்து தலைக்கு குளித்தால் பொடுகும் நீங்கும், முடியும் நன்கு உறுதியாக வளரும்.
மேலும் கூந்தல் பட்டுப் போன்ற மென்மையாக இருக்கவும் பப்பாளி உதவும். அதற்கு ஒரு வாழைப்பழம், பப்பாளி துண்டுகள் சிறிது, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை மிதமான சூட்டில் வைத்து, அதன் பின்னர் தலைமுடியில் தடவி வந்தால் மென்மையான அழகான கூந்தலை பெறலாம். இது போன்று வழிமுறைகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க இயலும்.