பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும். கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ் கோழிக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக் கூடாது என்பதற்காக அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் ஏற்படுகின்றன. கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகள் கோழிகளுக்கு செலுத்துகின்றனர். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்கள் குழந்தை பத்து பதினோரு வயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளதால் நம் கல்லீரல் வீக்கத்தையும், ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்களும், கல்லீரல் கேன்சர் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு போன்ற வியாதிகளின் எண்ணிக்கையை அதிகமாகிறது. கோழிகளின் கால் பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. இது வயிற்றுப் பகுதியில் குறைவாகத்தான் இருக்கின்றது.
கோழிக்கறி என்றாலே லெக் பீஸ் தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக் பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி விடும். நாட்டுக் கோழியின் முட்டையின் மஞ்சள் கரு அதிகமாகவும், வெள்ளைக்கரு குறைவாகவே இருக்கும். பிராய்லர் கோழிகளில் வெள்ளைக்கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக்களின் ஊட்டச்சத்து சார்ந்ததாகவே இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.