மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் அருணன் மேற்குவங்க பாஜக தலைவரை கிண்டலடித்தும், விமர்சித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய பசுக்கள் அனைத்தும் நமக்கு தாய்.
வெளிநாட்டு பசுக்கள் அனைத்தும் நமக்கு அத்தை. இந்திய பசுக்களை தாய்போல் கருதி பேணி பாதுகாத்து வளர்க்க வேண்டியது நமது கடமை. வெளி நாட்டு பசுக்களான அத்தைகளை கொள்ளலாம் என்பது பாஜக தலைவரின் கூற்றாக இருக்கும் பட்சத்தில், பாஜக ஆட்சியில் இந்தியாவில் அத்தைகளுக்கு ஆபத்து ! ஆபத்து ! என்று பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.