கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் புளிசாதம் பிரசாதம் செம்பு பாத்திரத்தில் தயாரிக்க கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான இந்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் ஆகியவை மத்திய அரசின் BHOG சான்றிதழ் பெறவேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அதிரடி காட்டியுள்ளது. உணவகங்கள் , கோவில்களில் பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் ஆகியவற்றை தர நிர்ணய அமைப்பான fssai தரக்கட்டுப்பாட்டு ஆய்வு செய்து BHOG சான்றிதழ் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் நெல்லையப்பர் கோவில், பாபநாசம் உலகநாத சுவாமி கோவில் ஆகியவற்றிற்கு BHOG சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து கோவில்களிலும் இந்த சான்றிதழ் பெற வலியுறுத்தி கோவில் செயலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, உணவுக் கூடம், ஹோட்டல்கள் அரசு மற்றும் தனியார் உணவகங்களில் உணவு தயாரிக்கும் சுத்தம், சுகாதாரம் மற்றும் கோவிலில் வழங்கும் பிரசாதங்கள் சுத்தமாக உள்ளனவா? என்பதை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.
இதையடுத்து கோவில்களில் பக்தர்கள் அதிகம் விரும்பி சாப்பிட புளிசாதம் போன்ற பிரசாதங்களை செம்பு பாத்திரத்தில் தயாரித்து வழங்கக்கூடாது. ஏனெனில் செம்பு பாத்திரத்தில் உள்ள அமிலம் உணவில் கலந்து நஞ்சாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே உணவு பாதுகாப்பு துறையின் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவில் 55 கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.