Categories
உலக செய்திகள்

உலகிற்கே ஆபத்து… “200 தலிபான்கள் விடுதலை”… இன்னும் 200 பேர் தான்… விரைவில் பேச்சு வார்த்தை..!!

பல தடைகளுக்கு பிறகு உலகிற்கே ஆபத்தான தலிபான் பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான பணியை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது

2006 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்த அந்நாட்டு அரசின் உதவியோடு அமெரிக்கா சென்ற பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தனது படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுவதாக ஒப்புதல் அளித்தது. ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைபட்டிருக்கும் 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

அவர்களின் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் முன்வருவோம் என்றும் எங்கள் பிடியில் இருக்கும் ஆயிரம் பேரை விடுவித்து விடுவோம் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4600 பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோன்று தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களும் விடுதலையாகி வந்தனர். ஆனால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதமுள்ள 400 பயங்கரவாதிகளை அந்நாட்டு அரசு விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தது.

அவர்களின் விடுதலைக்கு அந்நாட்டின் ஜனாதிபதியான அஷ்ரப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக காணொளி அழைப்பு மூலம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி இந்த 400 பயங்கரவாதிகள் நமக்கு மட்டுமல்லாது இந்த உலகத்திற்கே மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள் என எச்சரிக்கை விடுத்தார். அதோடு அவர்களில் 150 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்ற காத்திருக்கின்றார்கள். 44 பேர் அமெரிக்காவின் ஆபத்து நிறைந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் அதோடு இவர்களில் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களை கொலை செய்தவர்களும் இருக்கின்றனர்.

இதன் காரணமாக இந்த 400 பயங்கரவாதிகளின் விடுதலைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்தகைய எதிர்ப்புகளையும் தாண்டி 400 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்வதற்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய தலைவர்கள் அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் விடுதலை செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 400 பேரில் 50 சதவீதத்தினர் கடந்த திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அதற்கு பதிலாக பயங்கரவாதிகள் சிறை பிடித்து வைத்திருந்த ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையின் கமண்டர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதோடு மீதமிருக்கும் 200 பயங்கரவாதிகளும் விடுதலை செய்யப்பட்டு விரைவில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நிகழும் என அந்நாட்டு அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |