ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட்டை பதிவிறக்கம் செய்தால் ஸ்மார்ட்போன் செயலிழந்து விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோமி நிறுவனம் பல்வேறு வசதிகொண்ட செல்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் இதில் புதுப்புது அம்சங்களையும் கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பயனாளர்களின் ஸ்மார்ட்போன்கள் செயல் இழந்து விட்டதாக பல புகார்கள் குவிந்துள்ளன.
ஆனால் இந்த புகார்களுக்கு ஜியோமி நிறுவனம் இன்னும் பதிலளிக்கவில்லை. புதிய அப்டேட்டில் எதுவும் கோளாறு இருக்கலாம் என்றும், அதனால் பயனாளர்கள் இதனை தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் டுவிட்டரில் கூறப்பட்டு வருகிறது.