Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற… டென்மார்க் மகாராணிக்கு கொரோனா…!!!

டென்மார்க் நாட்டின் ராணி இரண்டாம் மார்கரெத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் அரண்மனை வெளியிட்ட தகவலின் படி, ராணிக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, ராணி ஃப்ரெடென்ஷ்பார்க் அரண்மனையில் இருக்கிறார். ராணி, இந்த வாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் ராணி மார்கரெத்திற்கு, 82 வயதாகிறது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பின் அவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கிறது.  இந்த வருடத்தில் ராணி மார்கரெத்திற்கு இரண்டாம் தடவையாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கு பின் ஐரோப்பாவின் அதிக காலத்திற்கு ஆட்சி செய்தவர்களில் இரண்டாம் இடத்தில் ராணி மார்கரெத் இருக்கிறார்.

Categories

Tech |