இந்திய புகைப்பட கலைஞரின் மரணம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள மும்பையைச் சேர்ந்தவர் டேனிஸ் சித்திக் என்ற புகைப்படக் கலைஞர். இவர் மும்பையில் உள்ள ராய்ஸ்டர் பத்திரிக்கையில் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனையை ஆவணப்படுத்தி காட்டியதற்காக உயரிய விருதான புல்லிட்சர் விருது பெற்றார். இதனையடுத்து இவர் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்தும் தாக்குதலை பற்றி தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தலீபான்களிடம் சிக்கிய காவல் அதிகாரி ஒருவரை ஆப்கான் வீரர்கள் மீட்டு திரும்பியுள்ளனர். அப்பொழுது அவர்களுடன் பயணித்த சித்திக் மற்றும் ஆப்கான் வீரர்களை நோக்கி தலீபான்கள் ஏவுகணை மூலம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில் காயம் பட்ட சித்திக்கை அருகில் இருந்த மசூதி ஒன்றிற்கு ஆப்கான் வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து திரும்பும் பொழுது சித்திக்கை தவறுதலாக மறந்து விட்டு வந்துள்ளனர். அதற்குப் பிறகு அவர்களின் கையில் சித்திக்கின் உயிரற்ற உடல் தான் கிடைத்துள்ளது. இதன் பின்னர் சித்திக்கின் உடல் கைப்பற்றப்பட்டு சோதனை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் “தலீபான்கள் சித்திக்கின் உடலை கூறாக வெட்டியும் அவரின் மீது வாகனத்தை ஏற்றியும் உள்ளனர். மேலும் அவர் கொல்லப்பட்டபின் சித்திக்கின் உடலை பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்” என்று தெரிய வந்துள்ளது.
தற்பொழுது அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர் கூறியதில் “சித்திக்கை கண்டுபிடிக்கும் போது உடலில் காயங்கள் இருந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். அதிலும் சித்திக் ஆப்கான் வீரர்களுடன் பயணிக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஒரு வாகனத்தின் அருகே குண்டு வெடிக்கும் புகைப்படத்தை எடுத்தது தான் அவரின் கடைசி தருணம். குறிப்பாக இவர் Rike என்ற ஜெர்மனி பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.