Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் -செல்வராகவன் கூட்டணியின் புதிய படம்… வெளியான படப்பிடிப்பு புகைப்படம்…!!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பிரபல இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாரிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . மேலும்  ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக பதிவு செய்து டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று  தயாராகிறது . இந்த படத்தின் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது .

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இயக்குநர் செல்வராகவன் படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தற்போது  இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது ‌.

 

Categories

Tech |