தர்பார் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரத்தை வெளியிடுமாறு லைக்கா நிறுவனத்தை ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த தர்பார் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனால் லைக்கா நிறுவனம்பதிவிடக்கூடிய ஒவ்வொரு பதிவிலும் சென்று தர்பார் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.