சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜப்பானில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் ரஜினியின் படங்கள் அனைத்தும் ஜப்பானிலும் தொடர்ந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.
அந்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘தர்பார்’ திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஜப்பானில் வெளியான ரஜினியின் தர்பார் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தியேட்டர்களில் படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.