Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ளம்… தள்ளாடும் தார்பங்கா… உயிரிழப்பு 25 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தர்பங்கா மாவட்டம் அதிக பாதிக்காப்பட்டுள்ளது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பிகாரில்  ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இது போன்று முசாபர்பூர் பகுதியில் 6 பேரும், மேற்கு சம்பரான் பகுதியில் 4 பேரும், சரண் மற்றும் சிவான் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 9வது பட்டாலியன் கமாண்டர் விஜய் சின்ஹா கூறுகையில், “வெள்ளம் பாதித்த 14 மாவட்டங்களில் 23 குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்” என்று கூறினார்.

Categories

Tech |