தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிடிஆர், நிதி அமைச்சராக கூட்டுறவு துறை வளர்ச்சி செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை. தனக்கு கூட்டுறவு துறையில் தனிப்பட்ட ஆர்வம் உள்ளது என்றும் உலக அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படக்கூடிய வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் கூட்டுறவு துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூட்டுறவு துறை வார விழா நிகழ்ச்சியிலேயே அமைச்சர் பிடிஆர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டாஸ்மா சிஸ்டம் சரியில்லை என பிடிஆர் பேசியது தற்போது ஹார்ட் பீட்டாகவும் மாறி உள்ளது. தமிழகத்தில் மது விற்பனை வருமானமும் உயர்ந்தாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. வருமானத்தில் அது வெளிப்படவில்லை. அதனால் விற்பனையும், வருமானமும் டாஸ்க் டாஸ்மாக் கணக்கில் தான் வருதா என்ற கேள்வி எழுகிறது. டாஸ்மாக் விற்பனையை சிஸ்டத்துக்குள் கொண்டு வருவதுதான் ஒரே வழி. மது ஆலையில் இருந்து ஒவ்வொரு கடை வரைக்கும் கணினி மையமாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்தில் உண்மையான மதுவிற்ப்பனை என்ன என்பது தெரிய வரும். ஆனால் இது என்னுடைய துறை இல்லாததால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என்று என்று அவர் கூறியது மதுவிலக்கு ஆயுத தேர்வை அமைத்து செந்தில் பாலாஜிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.