மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Data Entry Operator பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Data Entry Operator (English / Hindi)
காலியிடங்கள்: 100
சம்பளம்: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.19,572, பட்டதாரி அல்லதாவர்களுக்கு மாதம் ரூ.17,991 வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்தவற்றை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (HR) in BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P)
முழுமையான விவரங்கள் அறிய:
https://www.becil.com/uploads/vacancy/1b9fcfa5c2813b15203a7d03bee5d893.pdf
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2020