Categories
அரசியல்

தேதியை குறிச்சிக்கோங்க…. தமிழகத்தில் முழு ஊரடங்கு….. அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கீழ்கண்ட 4 தேதிகளில்  தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் ஊரடங்கு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் ஊரடங்கு கடைப் பிடிக்கப் பட்டாலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே ஊரடங்கு நீட்டிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆறாவது கட்டமாக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஒரு சில தளர்வுகள் உடனும் ஊரடங்கு ஜூலை 31 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 5, 12, 19,26  ஆகிய தேதிகளில் எந்தவித தளர்வும் இன்றி தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் ஏற்கனவே அரசால் அறிவுறுத்தப்பட்டது படி, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் ஐம்பது பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |