சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தற்போது வெளியாகிய தகவலின்படி இரண்டு திரைப்படங்களும் மோதலில் இருந்து விடுபட்டு உள்ளது என உறுதியாகியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படம் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் முடிவு எடுத்திருப்பதாக சினிமா டிராக்கர் ஸ்ரீதர் பிள்ளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.