டேட்சன் நிறுவனம் தனது கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் டேட்சன் நிறுவனம் தனது கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களின் விலையை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்த இரு மாடல்களின் விலை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த புதிய விலை மாற்றம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்நிலையில், விலை மாற்றத்தின் படி இரு மாடல்களின் விலை ரூ. 30,000 வரைஅதிகமாகியுள்ளது.
குறிப்பாக இது கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை பொருத்து மாறுபடும். மேலும், இந்தியாவில் டேட்சன் கோ விலை ரூ. 3.35 லட்சத்தில் துவங்கி ரூ. 5.20 லட்சம் வரையும் டேட்சன் கோ பிளஸ் விலை ரூ. 3.86 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் விலை ரூ. 5.94 லட்சம் வரை என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த இரு மாடல்களிலும் சீட் பெல்ட் ரிமைண்டர் மற்றும் இதன் உயர் ரக மாடலில் வெஹிகில் டைனமிக் கண்ட்ரோல் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டேட்சன் நிறுவனம் இரு மாடல்களிலும் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், டேட்சன் மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களில் ஒற்றை 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.