திருமணமான இளம்பெண் கையில் எழுதப்பட்ட உருக்கமான செய்தியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் ஒரு வருடத்திற்கு முன்பு நர்பத் மேக்வால் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு செவ்வந்தியின் தாய் உயிரிழந்த விட தந்தை தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தைக்கு துணையாக இருந்து வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு வந்து ஒரு மாத காலம் தந்தையுடன் வசித்து வந்துள்ளார் செவ்வந்தி. இரண்டு தினங்களுக்கு முன்பு தந்தை வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சமயம் செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வீடு திரும்பிய தந்தை மகள் செவ்வந்தி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் செவந்தியின் கையை பார்த்தபோது “என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. என்னை கணவர் வீட்டுக்கு அனுப்பாதீர்கள். ஐ லவ் யூ அப்பா” என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து செவந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு அவர் தற்கொலை செய்துகொண்டது கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாகவா என்ற சந்தேகத்துடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்