தந்தை திட்டியதால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஸ்வேச பகுதியில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்வேதா வீட்டு வேலை செய்யாமலும் மற்றும் படிக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் ஸ்வேதாவின் தந்தை ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ஸ்வேதா காலை நேரத்தில் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரின் பெற்றோர் ஸ்வேதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஸ்வேதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.