மகளின் காதலனை திருமணம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தந்தையே அவரை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம், பெங்கரகுண்டா என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்க்கும் இடத்தில் சைலஜா என்ற பெண்ணை இவர் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். இவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக சைலஜா அவரது தந்தையுடன் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். பின்னர் சைலஜா தனது தந்தையிடம் தனது காதலை பற்றி தெரிவித்துள்ளார். இந்த காதலில் சைலஜாவின் தந்தைக்கு சிறிதுகூட விருப்பம் இல்லை. இதனால் சைலஜாவின் போனில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி தனசேகரை அழைத்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர்கள் தனசேகரை காணவில்லை என்று பல இடங்களில் தேடியுள்ளனர். அதன் பின்பு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பெயரில் அவரது செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து பார்த்தபோது கடைசியாக சைலஜாவின் தந்தையிடமிருந்து அழைப்பு வந்து இருந்தது தெரிய வந்தது. பின்னர் அங்கு சென்று அவரிடம் விசாரணை செய்ததில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அதன் பின்பு தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த அவரது உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ததில் தனது மகளுடனான காதலை முறித்துக் கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து புதைத்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.